கமல்ஹாசன் அறுவை சிகிச்சை முடிந்து மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ..!
மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார். வலது காலில் அறுவை சிகிச்சை செய்வதற்காக கடந்த 18ஆம் தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் 19ஆம் தேதி காலை அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.
கடந்த 2016ஆம் ஆண்டு நடந்த சிறு விபத்தில் கமலஹாசனுக்கு வலது காலில் எலும்பு முறிவு ஏற்பட்டு உள்ளது. அதனை தொடர்ந்து அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.
கடந்த சில மாதங்களாக மீண்டும் காலில் வலி ஏற்பட்டதால் மற்றும் அறுவை சிகிச்சை செய்யும் படி மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். தனியார் மருத்துவமனையில் கமல்ஹாசனின் வலது காலில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.
அறுவை சிகிச்சைக்கு பின் மருத்துவமனையில் இருந்து இன்று வீடு திரும்பியுள்ள கமல்ஹாசன் மேலும் பத்து நாட்கள் ஓய்வெடுக்க வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.






