--- --:--:-- --

கேரளா லாட்டரியில் 12 கோடி ரூபாய் பரிசு பெற்ற நபர்..!

8

தென்காசி மாவட்டம் செங்கோட்டை பகுதியை சேர்ந்த லாட்டரி வியாபாரிக்கு கேரளா லாட்டரியில் 12 கோடி ரூபாய் பரிசு கிடைத்துள்ளது. தர்மபுரம் கிராமத்தை சேர்ந்த சர்புதீன் கடந்த 17ஆம் தேதி கேரள மாநிலம் ஆரியங்காவு பகுதியில் வெங்கடேசன் கிறிஸ்துமஸ் நம்பர் லாட்டரி 300 ரூபாய் கொடுத்து வாங்கியுள்ளார்.

 

அவர் வாங்கிய முதல் பரிசாக 12 கோடி ரூபாய் விழுந்துள்ளது. பரிசு விழுந்த அதிர்ஷ்டசாலி யார் என்று தெரியாமல் இரு மாநில எல்லைப் பகுதியில் அனைவராலும் பேசப்பட்டு வந்த நிலையில் தற்போது தனது சகோதரர்களுடன் திருவனந்தபுரத்தில் அந்த லாட்டரி டிக்கெட் டெபாசிட் செய்துள்ளார். அதன் பின்புதான் இவர் தமிழ்நாட்டை சேர்ந்தவர் என்பது தெரியவந்தது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon