--- --:--:-- --

பெட்ரோல், டீசல் விற்பனையில் 1.96 லட்சம் கோடி வருவாய்..!

8

பெட்ரோல் விலை தொடர்ந்து உயர்ந்து வரும் நிலையில் இதன் மூலம் கலால் வரியாக அரசுக்கு கிடைக்கும் வருவாய் 48 சதவீதம் அதிகரித்துள்ளது.

 

பெட்ரோல், டீசல் விற்பனை மூலம் நடப்பு நிதி ஆண்டின் முதல் 8 மாதங்களில் மட்டும் அரசுக்கு ஒரு லட்சத்து 96 ஆயிரத்து 342 கோடி ரூபாய் கலால் ரூபாயாக கிடைத்துள்ளது.எட்டு மாதங்களில் கிடைத்த தொகையை விட இது 48 சதவீதம் அதிகமாகும். மத்திய கணக்கு தணிக்கை அலுவலக புள்ளிவிவரங்களில் இந்த விவரம் தெரியவந்துள்ளது.

 

தற்போது ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு 32 ரூபாய் 98 காசும், ஒரு லிட்டர் டீசலுக்கு 31 ரூபாய் 83 காசும் கலால் வரியை மத்திய அரசு வசூலிக்கிறது. மத்திய அரசு விதிக்கும் கலால் வரியை தவிர மாநில அரசுகளின் மதிப்பு கூட்டு வரியை பெட்ரோல் டீசல் விலையில் கணிசமான பங்கை வகிக்கிறது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon