--- --:--:-- --

சசிகலாவிற்கு ஜால்ரா தட்டுவதை ஏற்றுக் கொள்ள முடியாது..!

19

சிகலாவை முன்னாள் அமைச்சர் கோகுல இந்திரா உயர்வாகப் பேசியது ஏற்றுக் கொள்ள முடியாதது என்று மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். கட்சியின் கொள்கைக்கு உறுதுணையாக இல்லாவிட்டால் அது குறித்து கவனத்தில் கொள்ளப்படும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.

 

உதயநிதி பேசியதை பெண்களை இழிவுபடுத்தும் செயலாக கருதி எங்களின் நிலையை தெரிவித்தோம் எனவும் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

 

கட்சியில் இருந்துகொண்டு சசிகலாவை தூக்கி பேசுவது அவருக்கு ஜால்ரா தட்டுவது ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் யாராக இருந்தாலும் கட்சியில் இருந்தால் விசுவாசமாக இருக்கவேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon