--- --:--:-- --

தமிழகத்தின் பல மாவட்டங்களில் கடந்த 5 நாட்களாக கனமழை பெய்ய வாய்ப்பு..!

10

மிழகத்தின் பல மாவட்டங்களில் கடந்த 5 நாட்களாக கனமழை பெய்து வரும் நிலையில் குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய கடற்பரப்பில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவியது.

 

இந்த சுழற்சி மேலும் வலுப்பெற்று காற்றழுத்த தாழ்வு நிலையாக மாறியுள்ளதாகவும், குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை கன்னியாகுமரி அருகே மையம் கொண்டுள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

 

இதனால் தென் தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது. மேலும் கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களில் மிக பலத்த மழை பெய்யும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.

 

திண்டுக்கல், திருச்சி உள்ளிட்ட 7 மாவட்டங்களில் பலத்த மழை பெய்யும். காற்றழுத்த தாழ்வு நிலை மேலும் வலுப்பெற்று புயலாக மாறாது என்றும் அடுத்தடுத்த நாட்களில் கேரளா நோக்கி நகரும் என்றும் வானிலை மையம் குறிப்பிட்டுள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon