--- --:--:-- --

ஜனவரி மாத இறுதிக்குள் பள்ளிகளை திறக்க கோரிக்கை..!

8

னவரி மாத இறுதிக்குள் பள்ளிகளை திறக்குமாறு தமிழக அரசுக்கு தனியார் பள்ளிகள் சங்கங்களின் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது. தனியார் பள்ளிகள் கூட்டமைப்பு சங்கங்களின் சார்பில் ஆலோசனைக் கூட்டம் மதுரையில் நடைபெற்றது.

 

இதில் 38 மாவட்டங்களின் தனியார் பள்ளி சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டுள்ளனர். அரசு அங்கீகாரம் பெற்று 10 ஆண்டுகளாக செயல்படும் தனியார் பள்ளிகளுக்கு நிரந்தர அங்கீகாரம் வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.

 

இது போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி பிப்ரவரி இறுதியில் கவனயீர்ப்பு போராட்டம் நடத்தப்படும் என தனியார் பள்ளிகள் கூட்டமைப்பு சங்கங்கள் தெரிவித்துள்ளது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon