--- --:--:-- --

கோவை : ஆசை வார்த்தை கூறி 17 வயது மாணவி பாலியல் பலாத்காரம்.இருவர் கைது !!!

8.1

கோவை செல்வபுரத்தை சேர்ந்தவர் 17 வயது மாணவி.இவர் அங்குள்ள பள்ளியில் பிளஸ் 1 படித்து வருகிறார். ஆன்லைன் மூலம் வீட்டில் இருந்து படித்து வந்தார். இந்த நிலையில் மாணவியை திடீரென்று காணவில்லை. இதுகுறித்து அவரது பெற்றோர் செல்வபுரம் போலீசில் புகார் செய்தனர்.

 

போலீசார் மேற்கொண்ட விசாரணையில் மாணவியின் செல்போனுக்கு அதே பகுதியை சேர்ந்த டிரைவர் சண்முகம் ( வயது 30 ) மற்றும் சிதம்பரத்தை சேர்ந்த ஏழுமலை ( வயது 29) ஆகியோர் அடிக்கடி பேசியது தெரியவந்தது. இந்த நிலையில் வேளாங்கண்ணி பகுதியில் இருந்த மாணவியை போலீசார் மீட்டு கோவைக்கு அழைத்து வந்தனர்.

 

மாணவியிடம் போலீசார் நடத்திய விசாரணையில் ஏழுமலை,சண்முகம் ஆகியோர் ஆசை வார்த்தை கூறி தன்னை ஏமாற்றி கடத்திச்சென்று பாலியல் பலாத்காரம் செய்ததாகவும், மாணவியை ஊட்டி, திருச்சி உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கு அழைத்துச்சென்று பாலியல் பலாத்காரம் செய்ததும் தெரியவந்தது.

 

இதனையடுத்து செல்வபுரம் போலீசார் அவர்கள் இருவரையும் போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.  பின்னர், இருவரையுமபோக்சோ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.

 

கோவை மாவட்டத்தில் சமீபகாலமாக பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் தொடர்ந்து அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon