தமிழ், ஹிந்தி போன்ற பல திரைப்படங்களில் நடித்துள்ள நடிகர் மாதவனுக்கு தனி ரசிகர் பட்டாளம் உண்டு. மாடலிங் துறையில் இருந்து சினிமாவுக்குள் நுழைந்த நடிகர் மாதவன் நடித்த அலைபாயுதே, ரன் உள்ளிட்ட பல படங்கள் சூப்பர் டூப்பர் ஹிட்டாகி விட தற்போது தமிழில் அவ்வளவாக வாய்ப்பில்லாத மாதவன் ஹிந்தி படங்களில் கவனம் செலுத்தி வருகிறார்.
சமீபத்தில் பாலிவுட் நடிகர் அமீத் சாத் தன்னுடன் மாதவன் இருக்கும் புகைப்படத்தை டுவிட்டரில் பகிர்ந்தார். அதற்கு மாதவனின் ரசிகர் ஒருவர் கமெண்ட் செய்திருந்தார். அதில்தான் மிகப் பெரிய ரசிகராக ஒரு காலத்தில் இருந்ததாக குறிப்பிட்டுள்ளார். தற்போது மாதவன் போதைக்கும் அடிமையாகி சினிமா வாழ்க்கையை பாழாக்கி கொண்டிருப்பதாக குற்றம்சாட்டியிருந்தார்.
மேலும் பாலிவுட்டில் கால் பதிக்கும் பொழுது கட்டிலம் காளை போல பொலிவுடன் இருந்த மாதவன் இப்போது மது மற்றும் போதைக்கு அடிமையாகி உள்ளார் என்பதை அவரின் கண்களே காட்டுவதாகவும் அந்த ரசிகர் குற்றம்சாட்டியிருந்தார். ஆனால் ரசிகரின் இந்த கமெண்ட்டை மாதவன் ரசிக்கவில்லை.
அந்த ரசிகருக்கு பதிலளித்துள்ள மாதவன் ரசிகரை நோய் அறிதல் திறன் கண்டு வியப்பதாகவும் அவர் ஒரு நல்ல மருத்துவரிடம் சிகிச்சைக்கு செல்ல வேண்டும் என்றும் அதிரடியாக பதிலளித்துள்ளார். மாதவனின் இந்த பதில் சற்று நேரத்திலேயே சமூக வலைத்தளங்களில் வேகமாக பரப்பியது.
இதனைத் தொடர்ந்து பல ரசிகர்கள் மாதவனுக்கு ஆதரவாக தங்கள் கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர். அதில் ஒரு ரசிகர் இது போன்ற எதிர்மறை கருத்துக்களை மாதவன் புறம் தள்ள வேண்டும் என்றும் எப்பொழுதும் போல மாதவன் நல்ல ஆரோக்கியம் தான் இருக்கிறார் என்றும் கூறியுள்ளார்.