கோவை : மேட்டுப்பாளையம் உட்கோட்ட காவல் நிலையங்களை மாவட்ட எஸ்.பி. அருளரசு திடீர் ஆய்வு

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் அலுவலக கட்டுப்பாட்டில் உள்ள மேட்டுப்பாளையம், அன்னூர் ,சிறுமுகை காரமடை, பில்லூர் டேம், ஆகிய காவல் நிலையங்களின் முக்கிய வழக்கு கோப்புகளையும், அலுவலகத்தில் பராமரிக்கப்படும் ஆவணங்களையும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அருளரசு திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

 

ஆய்வின் போது கோவை மாவட்டத்தில் ரவுடித்தனம், போதைப்பொருட்கள் கடத்தல் மற்றும் விற்பனை ஆகியவற்றையும்,ஒரு நம்பர் லாட்டரி சூதாட்டங்களை முற்றிலும் ஒழித்திடவும், போக்குவரத்து நெரிசல் ஏற்படா வண்ணம் சீர் செய்யவும்,சட்ட விரோத செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுத்திடவும்,காவல் நிலையங்களுக்கு புகார் அளிக்க வரும் பொதுமக்களிடம் கனிவுடன் நடந்து கொள்ள வேண்டும் எனவும், காவல் நிலைய நடவடிக்கைகள் அனைத்தும் சட்டத்திற்குட்பட்டு இருக்கவேண்டும் எனவும் அறிவுறுத்தினார்.

 

மேலும்,குற்ற வரலாறு உள்ள நபர்களை, காவல் நிலையத்திற்கு வரவழைத்து அவர்களுக்கு அறிவுரைகளையும் வழங்கினார்.கிராமப் பகுதிகளில் உள்ள பொதுமக்கள் அந்தந்த பகுதிகளிலே சிரமமின்றி இலகுவாக புகார்களை தெரிவிக்க, காவலர்களின் புகைப்படங்கள் மற்றும் தொடர்பு எண்ணுடன் வைக்கப்பட்டுள்ள விளம்பரப் பலகைகளை திறந்து வைத்தும் பேசினார்.பல பகுதிகளில் விளம்பர பலகை வைத்திடவும் உத்தரவிட்டார்.

 

மாவட்ட எஸ்.பி.அருளரசு கூறியதாவது, ” மாவட்டக் காவல்துறையில் தற்போது 3 மகளிர் காவல் நிலையங்கள் உள்ளன.பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை விசாரிக்க பிரத்யேகமாகக் கூடுதல் எஸ்.பி. உள்ளார் எனவும்,தற்போது, மேட்டுப்பாளையம், ஆனைமலை, கருமத்தம்பட்டி ஆகிய இடங்களில் புதியதாக 3 மகளிர் காவல் நிலையங்கள் ஏற்படுத்த திட்டமிடப்பட்டு கருத்துரு தயாரிக்கப்பட்டு அரசுக்குச் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகவும் ,அரசு ஒப்புதல் அளித்தவுடன் 3 புதிய மகளிர் காவல் நிலையங்கள் மாவட்டக் காவல்துறையில் தொடங்கப்படும்” என கூறினார்.

 

ஆய்வின்போது மேட்டுப்பாளையம் டி.எஸ்.பி. ஆரோக்கியராஜ், மேட்டுப்பாளையம் இன்ஸ்பெக்டர் சிவக்குமார், சிறுமுகை இன்ஸ்பெக்டர் தவமணி,காரமடை இன்ஸ்பெக்டர் செல்வராஜ்,அன்னூர் இன்ஸ்பெக்டர் வெங்கடேசன், மேட்டுப்பாளையம் காவல்துறை எஸ்.ஐ.க்கள் பிரபாகரன்,திலக், சிவசாமி,சிறுமுகை எஸ்.ஐ. முனுசாமி, காரமடை எஸ்.ஐ. நாகராஜ், அன்னூர் எஸ்.ஐ.சிலம்பரசன் செந்தில்குமார், தனிப்பிரிவு தலைமை காவலர் ராஜீ உள்ளிட்ட அதிகாரிகள் மற்றும் காவல்துறையினர் உடனிருந்தனர்.


Leave a Reply