புதுச்சேரியில் இன்று முதல் அனைத்து கல்லூரிகளும் திறப்பு..!

புதுச்சேரியில் இன்று முதல் அனைத்து உயர்கல்வி மற்றும் தொழில் நுட்பக் கல்லூரிகள் முழுமையாக திறக்கப்பட்டு வகுப்புகள் நடைபெற்றன.

 

கடந்த மாதம் கல்லூரிகளில் இறுதியாண்டு படிக்கும் மாணவர்களுக்கு வகுப்புகள் தொடங்கிய நிலையில் இன்று முதல் புதுச்சேரியில் உள்ள அனைத்து உயர்கல்வி மற்றும் தொழில் நுட்ப கல்லூரிகளிலும் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் முதலாமாண்டு மற்றும் இரண்டாம் ஆண்டுக்கான வகுப்புகள் தொடங்கின.

 

தனிமனித இடைவெளி கட்டாயமாக்கப்பட்டுள்ளது. உடல் வெப்பநிலை பரிசோதனைக்கு பிறகு மாணவர்கள் கல்லூரிக்குள் அனுமதிக்கப்பட்டனர். கல்லூரிக்கு வந்த முதலாமாண்டு இரண்டாமாண்டு மாணவிகளை இறுதியாண்டு படிக்கும் மாணவர்கள் வரவேற்றனர்.


Leave a Reply