கொரொனா சூழலில் திரையரங்குகளில் 100 சதவீத இருக்கைகளை பயன்படுத்த அனுமதிப்பது தற்கொலைக்கு சமம் என நடிகர் விஜய்க்கு டாக்டர் ஒருவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதுதொடர்பாக புதுச்சேரியை சேர்ந்த டாக்டர் அரவிந்த் ஸ்ரீனிவாஸ் என்பவர் தனது முகநூல் பக்கத்தில் வெளியிட்டுள்ள கருத்தில் டியர் விஜய் சார் சிலம்பரசன் சார் தமிழக அரசு முன் களப்பணியாளர்கள் ஆகிய நாங்கள் மிகவும் சோர்வாக உள்ளோம்.
மூச்சுவிட நேரம் வேண்டும். சிலரின் பேராசைக்காக நாங்கள் பலிகடா ஆக விரும்பவில்லை என்று குறிப்பிட்டுள்ளார். சட்டம் இயற்றுபவர்கள், ஹீரோக்களால் கூட்டத்துடன் சேர்ந்து படம் பார்க்கப் போவதில்லை என குறிப்பிட்டுள்ள அவர் மெதுவாக அணையும் தீயை தூண்டிவிட வேண்டாம் என்று குறிப்பிட்டுள்ளார்.
இவரது கருத்து சமூக வலைதளங்களில் பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.
மேலும் செய்திகள் :
விஜய் களமிறங்கும் தொகுதி..!
இதுபோல எந்த பிரதமரையும் பார்த்ததில்லை: கார்கே தாக்கு
கோயிலை தரை மட்டமாக்கி பிள்ளையார் சிலையை ஜேசிபியில் எடுத்துச் சென்று அதிகாரிகள் கொந்தளித்த மக்கள்..!
மூடிய பனிமூட்டம்..அடுத்தடுத்து மோதிய வாகனங்கள்..!
தேனியில் சிகிச்சை அளிக்க மருத்துவர்கள் செயலால் நோயாளி அவதி..!
மெட்ரோ ரயில் நிலையங்களில் புதிய வசதி அறிமுகம்..!