இலங்கை செல்லும் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர்..!

லங்கை வெளியுறவு அமைச்சர் அழைப்பின் பேரில் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் இன்று கொழும்பு செல்கிறார். சுற்றுப்பயணமாக இலங்கை செல்லவிருக்கும் ஜெய்சங்கர் அந்த நாட்டு வெளியுறவு அமைச்சரை சந்தித்து இருதரப்பு நல்லுறவு குறித்து பேச்சுவார்த்தை நடத்துகிறார்.

 

மேலும் இரு நாட்டு உறவுகளை வலுப்படுத்துவது தொடர்பாக இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவையும் ஜெய்சங்கர் சந்திக்க இருக்கிறார். இலங்கையில் சீனா தனது பிடியை வலுப்படுத்தி வரும் நிலையில் இந்த பயணம் முக்கியத்துவம் பெறுகிறது.


Leave a Reply