தைப்பூச நாளன்று அரசு பொது விடுமுறை அளிக்க வேண்டும் என பாஜக மாநிலத் தலைவர் முருகன் வேண்டுகோள் விடுத்திருந்தார். இந்த நிலையில் முருகப்பெருமானை அனைவரும் வழிபடும் வகையில் தைப்பூசம் திருவிழாவிற்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பொது விடுமுறை அறிவித்துள்ளார்.
இந்த அறிவிப்பை வரவேற்கும் விதமாக கோவை காந்தி பார்க்கில் உள்ள முருகன் கோவிலில் பாஜக சார்பில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. அதனை தொடர்ந்து பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கியும், பட்டாசுகளை வெடித்தும் பாஜகவினர் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
இந்நிகழ்ச்சியில் மாவட்டத் தலைவர் நந்தகுமார், பொதுச்செயலாளர் ரமேஷ், பொதுச்செயலாளர் தாமு, மாவட்ட ஊடகப்பிரிவு தலைவர் பிரேம்குமார்,துணைத் தலைவர் பாலமுருகன், மண்டலத்தலைவர் ராஜரத்தினம்,சேகர், மாவட்டச்செயலாளர் கார்த்திக் மற்றும் ஜெகன் உள்ளிட்ட பாஜக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
மேலும் செய்திகள் :
திருவாடானை அருகே கோவிலில் லட்சார்ச்னை! ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டனர்!
மின்சாரம் தாக்கி டைல்ஸ் தொழிலாளி பலி.. போலீஸ் விசாரணை..!
வார விடுமுறை.. நாளை முதல் சிறப்பு பேருந்துகள் அறிவிப்பு..!
ஸ்டாலின் சமரசம்.. நோட்டீஸை வாபஸ் பெற தயாநிதி முடிவு..!
செயின் பறிப்பு வழக்கில் 2 பேருக்கு 3 ஆண்டுகள் சிறை..!
ஜூலை 16ல் திருவண்ணாமலையில் அதிமுக ஆர்ப்பாட்டம்..!