மனுவாக தாக்கல் செய்தால் விசாரணைக்கு எடுத்துக் கொள்கிறோம் – உயர்நீதிமன்றம்
ஜெம் வீரமணி மீதான வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மூத்த வழக்கறிஞர் என்.எல்.ராஜா முறையீடு செய்துள்ளார். இதுதொடர்பாக முறையாக மனுவாக தாக்கல் செய்தால், அதனை விசாரணைக்கு எடுத்துக்கொள்வதாக சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு தெரிவித்துள்ளது.
இதையடுத்து, வழக்கை சிபிஐக்கு மாற்றக் கோரும் மனு விரைவில் தாக்கல் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




