கேரளாவில் பரவியுள்ள பறவை காய்ச்சல் மனிதருக்கும் பரவலாம்..!
கேரளாவில் பரவியுள்ள பறவை காய்ச்சல் மனிதருக்கும் பரவலாம் என்று தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் இதனை கூறியுள்ளார்.
கேரளாவிலிருந்து வரும் வாகனங்களில் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வாகனங்களில் கிருமி நாசினி தெளித்து அனுமதிக்கப்பட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.
தமிழகத்தில் இதுவரை நான்கு பேர் உருமாறிய புதிய வகை கொரொனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறியவர் மழைக்காலம் என்பதால் டெங்கு பரவாமல் தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றார்.






