அரசுப் பள்ளியில் காலை உணவு சாப்பிட்ட 14 மாணவர்களுக்கு திடீர் வாந்தி
நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு அடுத்த மல்லசமுத்திரம் அரசினர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் இன்று காலை உணவுத் திட்டத்தின் கீழ் மாணவர்களுக்கு வழங்கப்பட்ட சேமியா கிச்சடியை சாப்பிட்ட 14 மாணவர்களுக்கு திடீரென வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கு ஏற்பட்டது.
உடனடியாகப் பாதிக்கட்ட மாணவர்கள் அனைவரும் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வரும் நிலையில், மாணவர்களின் உடல்நிலை சீராக இருப்பதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. உணவு தரம் குறித்து அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




