மேட்டுப்பாளையம் : பிரசவ வலியில் தவித்த கர்ப்பிணி.ஆம்புலன்ஸ் வாகனத்திலேயே பிரசவம்.108 மருத்துவ உதவியாளருக்கு குவியும் பாராட்டுகள் !!!

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தை அடுத்துள்ள சுக்குக் காப்பி கடை பகுதியை சேர்ந்தவர் குமார்.இவர் மனைவி கோகிலா மணி ( வயசு 28 ). நிறைமாத கர்ப்பிணியான கோகிலாமணிக்கு திடீரென பிரசவ வலி ஏற்பட்டுள்ளது.

 

உடனடியாக 108 ஆம்புலன்சுக்கு தகவல் கொடுத்துள்ளனர்.108 ஆம்புலன்ஸ் மருத்துவ உதவியாளர் அஜித் மற்றும் பைலட் நந்தகோபால் ஆகியோர் விரைந்து சென்று கர்ப்பிணிப்பெண் கோகிலா மணியை மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு அழைத்து வந்தனர்.

 

ஆனால்,வரும் வழியிலேயே கோகிலாவிற்கு பிரசவ வலி அதிகரிக்கவே மருத்துவ உதவியாளர் அஜீத் பிரசவம் பார்த்துள்ளார். அப்போது,அவருக்கு அழகான ஆண் குழந்தை பிறந்துள்ளது. பின்னர், தாயையும், குழந்தையையும் அரசு மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளித்தனர்.தற்போது தாயும் குழந்தையும் நலமாக உள்ளனர்.

 

கர்ப்பிணிக்கு பிரசவ வலி அதிகரிக்கவே ஆம்புலன்ஸ் வாகனத்திலேயே பிரசவம் பார்த்த மருத்துவ உதவியாளர்களுக்கு பொதுமக்கள் சமூக வலைத்தளங்களில் பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர்.


Leave a Reply