ஒரு லட்சத்து 15 ஆயிரம் ரூபாய்க்கு விற்கப்பட்ட பச்சிளம் பெண் குழந்தை.!

சேலத்தில் பெற்ற தந்தையால் ஒரு லட்சத்து 15 ஆயிரம் ரூபாய்க்கு விற்கப்பட்ட பச்சிளம் பெண் குழந்தை பத்திரமாக மீட்கப்பட்டது. இது தொடர்பாக 5 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். காந்தி நகரை சேர்ந்த கூலித் தொழிலாளியான விஜய் சத்யா தம்பதிக்கு கடந்த நவம்பர் 1ஆம் தேதி மூன்றாவது பெண் குழந்தை பிறந்துள்ளது.

 

இதனால் அந்த குழந்தையை பக்கத்து வீட்டில் வசிக்கும் கோமதி என்பவருக்கு ஒரு லட்சத்து 15 ஆயிரம் ரூபாய் மனைவிக்கு தெரியாமல் விஜய் விற்பனை செய்துள்ளார். இதையடுத்து குழந்தையை காணவில்லை என காவல்துறையினரிடம் சத்யா புகார் அளித்துள்ளார்.

 

அதன்பேரில் பக்கத்து வீட்டுக்காரர்களிடம் விசாரித்த போது குழந்தையை ஈரோட்டை சேர்ந்த சித்ரா, நிஷா ஆகியோருக்கு விற்பனை செய்தது தெரிய வந்தது. பின்னர் அந்த குழந்தை 4 பேர் கைமாறி சுந்தரராஜ் என்பவருக்கு ஏற்பட்டதும் தெரியவந்தது.

 

58 நாட்களுக்கு பிறகு குழந்தையை மீட்ட காவல்துறையினர் கோமதி, நிஷா, சுந்தரராஜ் ஆகிய 5 பேரையும் கைது செய்துள்ளனர். இந்த வழக்கில் தலைமறைவான நபர்களை தேடி வருகின்றனர்.


Leave a Reply