பொங்கல் பரிசுக்கான டோக்கன் வழங்குவதை நிறுத்த வேண்டும்..!

திமுகவினரை கொண்டு பொங்கல் பரிசுக்கான டோக்கன் வழங்குவதை உடனடியாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நிறுத்த வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் மு க ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

 

கொரொனா மற்றும் நிவர் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிதி உதவிகளை வழங்குமாறு தான் விடுத்த வேண்டுகோள்களை முதலமைச்சர் நிராகரித்ததாக தனது அறிக்கையில் ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.

 

கொரொனா தொற்றால் பாதிக்கப்பட்டு ஓராண்டு காலத்திற்கு பிறகு மக்களுக்கு பொங்கல் பரிசாக 2,500 ரூபாய் வழங்கப்படும் என்ற அறிவிப்பை கேட்டு மகிழ்ச்சி அடைந்ததாக குறிப்பிட்டிருக்கும் ஸ்டாலின் அதே நேரத்தில் அதற்கான டோக்கனை அதிமுகவினரை கொண்டு வழங்குவதாக குற்றம்சாட்டியுள்ளார்.

 

டோக்கன் மற்றும் பொங்கல் பரிசு போன்றவற்றை ரேஷன் கடை ஊழியர்களை கொண்டே வழங்க வேண்டும் என்றும் இல்லையெனில் திமுக சார்பில் சட்டரீதியான நடவடிக்கை எடுப்பது குறித்து சிந்திக்க வேண்டியிருக்கும் என்றும் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.


Leave a Reply