--- --:--:-- --

தமிழகத்தில் தொட்டில் முதல் சுடுகாடு வரை லஞ்சம் வாங்கப்படுகிறது..!

2

மக்கள் நீதி மையம் திராவிட கட்சி தான் என கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். திருச்சியில் மகளிர் பிரிவு ஆலோசனைக் கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த அவர் தமிழகத்தில் தொட்டில் முதல் சுடுகாடு வரை லஞ்சம் வாங்கப்படுவதாக பட்டியல் ஒன்றை வாசித்தார்.

 

செய்த பாவத்திற்கு பிராயச்சித்தம் தேடவேண்டும் என்ற வகையில் இட ஒதுக்கீடு என்பது தேவையான ஒன்று என கமல் பதிலளித்துள்ளார். டார்ச்லைட் தங்களுக்கு உரியது என்றும், தேவைப்பட்டால் நீதிமன்றத்தை அணுகுவோம் என்றும் கூறினார்.

 

ரஜினி அரசியல் கட்சியை துவங்குவதாக நாடகமாடுகிறாரா என்ற கேள்விக்கு அவரது உடல்நிலை தான் முக்கியம் என்றார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon