பிரசாத் ஸ்டூடியோவில் இளையராஜாவின் அறையை காணவில்லை..!

பிரசாத் ஸ்டூடியோவில் இளையராஜாவின் அறையை காணவில்லை என்று அவரது தரப்பு வழக்கறிஞர் தெரிவித்துள்ளார். அறையின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார். சென்னையில் உள்ள பிரசாத் ஸ்டுடியோவிற்கு இன்று இளையராஜா செல்வது திடீரென ரத்து செய்யப்பட்டது.

 

பிரசாத் ஸ்டுடியோவுக்கும், இளையராஜாவுக்கும் இடையேயான பிரச்சனை குறித்து உயர் நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வருகிறது. இந்த வழக்கு விசாரணையின்படி இளையராஜாவின் பொருட்களை எடுத்துக் கொள்ளவும் ஒரு நாள் தியானம் செய்து கொள்ளவும் அனுமதி அளிக்கப்பட்டது.

 

இதையடுத்து இன்று இளையராஜா தரப்பு வழக்கறிஞர் சரவணன் பிரசாத் ஸ்டுடியோவுக்கு சென்று பார்வையிட்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய வழக்கறிஞர் இளையராஜாவின் அறையின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதாக தெரிவித்தார்.

 

இளையராஜாவின் அறையையும் காணவில்லை அவருடைய பொருட்களையும் காணவில்லை என்று அவர் கூறியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.


Leave a Reply