நான்கு சக்கர வாகனத்தின் முன்புறம் பம்பர் பொருத்தியிருக்கிறீர்களா ? நீங்களா கழற்றிடுங்க.இல்லையென்றால்…எச்சரிக்கும் வட்டார போக்குவரத்து அலுவலர்கள் !!!

நான்கு சக்கர வாகனங்களினால் ஏற்படும் விபத்துகளில் வாகன சேதங்களையும்,உயிர் பலியையும் தடுக்கும் பொருட்டு வாகனங்களின் முன் பகுதியில் பம்பர் பொருத்துவதற்கு மத்திய அரசு தற்போது தடைவிதித்துள்ளது.

 

இதுதவிர தற்போது நீதிமன்றமும் தமிழகத்தில் வாகனங்களில் இதுபோன்று பம்பர் பொருத்துவதை தடுக்க தீவிர நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளது. இதனடிப்படையில் மாநிலம் முழுவதும் அரசின் வழிகாட்டுதலின்படி வாகனங்களில் பம்பர் பொருத்துவதை தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

அதன் ஒருபகுதியாக கோவை வட்டார போக்குவரத்து அலுவலர்கள் சாலையில் செல்லும் டாட்டா ஏசி ஆட்டோக்கள்,கார்கள் ஆகிய வாகனங்களை வழி மறித்து பம்பரை கழற்ற வைத்து அபராதம் விதித்தனர். மேலும்,இது போன்று பொருத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுத்து அனுப்பி வைத்தனர்.

 

நான்கு சக்கர வாகனங்களின் முன்புறம் பொருத்தப்படும் பம்பர்களை நாமாக கழற்றி விட்டால் அபராதமாக கட்டணம் கட்ட வேண்டிய அவசியமில்லை.இல்லையென்றால் தேவையில்லாமல் அபராதம் கட்ட வேண்டியிருக்கும்.


Leave a Reply