மனைவிக்கு திருமண நாள் பரிசாக நிலாவில் 3 ஏக்கர் நிலம் வாங்கி தந்த கணவன்..!

ராஜஸ்தான் மாநிலம் அஜ்மீரில் தனது மனைவிக்கு எட்டாம் ஆண்டு திருமண  நாள் பரிசு வழங்க நிலாவில் மூன்று ஏக்கர் நிலம் வாங்கியுள்ளார் ஒரு கணவர். அஜ்மீரை சேர்ந்த தர்மேந்திரா என்பவர் பிரேசிலில் வாழ்ந்து வருகிறார்.

 

அவர் தனது மனைவியை சப்னாவுக்கு திருமண நாள் கேக் வெட்டியதும் மண நாள் பரிசாக நிலாவில் நிலம் வாங்கிய பதிவு சான்றிதழை அளித்துள்ளார்.

 

அவர்களுக்கு நிலவில் வசிப்பதற்கான குடியுரிமை யுடன் நிலம் வாங்கியதற்கான சான்றிதழை நியூயார்க்கில் உள்ள அமெரிக்க லூனர் சொசைட்டி என்ற நிறுவனம் விற்றுள்ளது. எவ்வளவு விலை கொடுத்து நிலவில் இடம் வாங்கினார் என்பதை தர்மேந்திரா தெரிவிக்கவில்லை.


Leave a Reply