கோவை : நரசிம்மநாயக்கன்பாளையம்,வெள்ளமடை,ராமம்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் அம்மா மினி கிளினிக் துவக்கம்.உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கலந்து கொண்டு துவக்கி வைத்தார் !!!

மிழகத்தில் தற்போது கொரோனோ வைரசின் தாக்கம் வெகுவாக குறைந்து வருகிறது.தற்போது உருமாற்றம் அடைந்த கொரோனா வைரஸ் இங்கிலாந்தில் துவங்கி தற்போது இந்தியாவிலும் பரவி வருகிறது.இந்த நிலையில் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் இல்லா இடங்களில் கர்ப்பிணிகள்,முதியோர் உள்ளிட்ட பொதுமக்கள் பயன்பெறும் வகையில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியால் துவக்கி வைக்கப்பட்டது.

 

இந்த நிலையில் கோவை மாவட்டத்தில் 70 அம்மா மினி கிளினிக் துவங்க அரசு உத்தரவிட்டுள்ளது.அதனடிப்படையில் கோவை மாவட்டம் நரசிம்மநாயக்கன் பாளையம்,வெள்ளமடை,காரமடையை அடுத்துள்ள ராமம்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் அம்மா மினி கிளினிக்கினை உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி இன்று துவக்கி வைத்தார்.அதனை தொடர்ந்து 10 கர்ப்பிணிகளுக்கு ரூ.2 ஆயிரம் மதிப்பீட்டில் தாய்,சேய் நலப்பெட்டகம் வழங்கப்பட்டது.

 

மேலும்,இந்த அம்மா மினி கிளினிக்கானது காலை 8 மணி முதல் 12 மணி வரையும்,மாலை 4 மணி முதல் 7 மணி வரை செயல்படும்.இதில் ஒரு மருத்துவர்,ஒரு செவிலியர்,ஒரு உதவியாளர் என மூவர் பணியில் இருப்பர் எனவும்,இங்கு சர்க்கரை,உயர் ரத்த அழுத்தம் உள்ளிட்ட தொற்றும் மற்றும் தொற்றா நோய்களுக்கான சிகிச்சையளிக்கப்படும் எனவும்,நோயாளிகளுக்கு தேவையான அனைத்து மருந்து,மாத்திரைகளும் வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் ராசாமணி,பேரூராட்சிகளின் உதவி இயக்குநர் துவாரகநாத் சிங்,துணை இயக்குநர் மருத்துவ பணிகள் ரமேஷ் குமார்,கோவை வடக்கு வருவாய் கோட்டாட்சியர் சுரேஷ்,முன்னாள் மாநிலங்களவை உறுப்பினர் ஏ.கே.செல்வராஜ், எம்.ஏல்.ஏ.க்கள் பி.ஆர்.ஜி.அருண்குமார்,வி.சி.ஆறுக்குட்டி,ஓ.கே.சின்னராஜ்,நரசிம்மநாயக்கன் பாளையம் பேரூராட்சி செயல் அலுவலர் கணேசன்,மாவட்ட அம்மா பேரவை செயலாளர் நாசர்,மேட்டுப்பாளையம் நகர செயலாளர் வான்மதி சேட்,ஒன்றிய செயலாளர்கள் கோவனூர் துரைசாமி, கே.வி.என்.ஜெயராமன், வெள்ளியங்காடு ஜீவானந்தம்,நகர செயலாளர் ஆனந்தன்,முன்னாள் சேர்மன் வீரபாண்டி விஜயன்,ஊராட்சி மன்ற தலைவர்கள் பிரபாகரன்,ரவி,ரமேஷ்,செளந்திரவடிவு ஆனந்தன்,சிக்கதாசம்பாளையம் விமலா,பெள்ளாதி பூபதி,சிக்காரம்பாளையம் ஞானசேகரன்,ஜடையம்பாளையம் ஊராட்சி மன்ற தலைவர் ஆர்.கே.பழனிச்சாமி,மாவட்ட தொழிற்சங்க இணைச்செயலாளர் மைதானம் கே.சந்தானம்,வர்த்தகர் அணி மாவட்ட செயலாளர் அர்ஜூனன்,மாவட்ட கவுன்சிலர்கள் சரவணன்,காரமடை சரவணக்குமார் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் உட்பட மருத்துவர்கள்,செவிலியர்கள்,மருத்துவ உதவியாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.


Leave a Reply