இளநீர் குடிக்க ஸ்ட்ராக்கு பதிலாக பப்பாளி தண்டு..!

யிலாடுதுறை மாவட்டத்தில் இளநீர் வியாபாரிகள் பிளாஸ்டிக் எனப்படும் நெகிழியால் ஆன உறிஞ்சிகுழாய்க்கு பதில் பப்பாளி இலைகளை பயன்படுத்தி பொது மக்களின் வரவேற்பை பெற்றுள்ளன.

 

சீர்காழி அருகே உள்ள வைத்தீஸ்வரன் கோவிலில் அமைந்துள்ள பழமையான வைத்தியநாத சுவாமி கோவிலுக்கும் நாடி ஜோதிட பார்ப்பதற்காகவும் அன்றாடம் ஏராளமானோர் வந்து செல்கின்றனர்.

 

இவர்களை குறிவைத்து வியாபாரிகள் இளநீர் விற்பனை செய்து வருகின்றனர். ஆனால் பிளாஸ்டிக் பயன்பாட்டுக்கு தடை விதிக்கப்பட்டதால் ஸ்ட்ரா பயன்படுத்த முடியாமல் போயிற்று. இதனால் பல பேர் இளநீர் பருக விரும்பாமல் தவிர்த்து வந்தனர்.

 

இதனையடுத்து பப்பாளி தண்டை ஸ்டிராவாக பயன்படுத்தினர் .இந்த புதிய முறை பொதுமக்களுக்கு பிடித்துப்போனதால் இளநீர் விற்பனையும் அதிகரித்துள்ளது.


Leave a Reply