தடையை மீறி அந்தியூர் வனப்பகுதியில் மது அருந்திய குற்றத்திற்காக 50 ஆயிரம் ரூபாய் அபராதம்..!

ரோடு அருகே அந்தியூர் வனப்பகுதியில் தடையை மீறி மது அருந்திய குற்றத்திற்காக 14 பேருக்கு 50 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே உள்ளது வரட்டுப்பள்ளம் அணை.

 

இங்குள்ள வனப்பகுதியில் சமீபகாலமாக வன விலங்குகள் வேட்டையாடப்படுவது அதிகரித்துள்ளதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. இதன் காரணமாக வரட்டுப்பள்ளம் அணை பகுதியில் வனத்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

 

இந்த நிலையில் காலை வனத்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த போது காட்டுப்பகுதியில் அமர்ந்த படி மது அருந்திக் கொண்டிருந்த 14 பேர் கொண்ட கும்பலை கையும் களவுமாக பிடித்தனர். இதுதொடர்பாக அவரிடம் விசாரணை மேற்கொண்டனர்.

 

விசாரணையில் அவர்கள் அனைவரும் ஈரோட்டை சேர்ந்தவர்கள் என்றும் அனைவரும் பர்கூர் மலைப்பகுதியில் சுற்றுலாவிற்கு வந்ததும் தெரியவந்தது. பின்னர் 14 பேர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டு 50 ஆயிரம் ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.

 

தடையை மீறி வனப்பகுதிக்குள் நுழைந்து மது அருந்திய குற்றத்திற்காக ஐம்பதாயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Leave a Reply