காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஸ்ரீபெரும்புதூரில் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தை சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் திறந்து வைத்துள்ளனர். 8 கோடியே 9 லட்சம் ரூபாய் செலவில் மூன்று ஏக்கர் பரப்பளவில் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் கட்டி முடிக்கப்பட்டுள்ளது.
இந்த வளாகத்தை சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் புஷ்பா சத்தியநாராயணன், பவானி சுப்பராயன் ஆகியோர் திறந்து வைத்தனர்.
இதேபோல ஆலந்தூரில் உள்ள நீதிமன்ற வளாகத்தில் ஆயிரத்து 800 சதுர அடி பரப்பளவில் 14 லட்சம் ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ள சார்பு நீதிமன்றத்தையும் நீதிபதிகள் திறந்து வைத்தனர். ஆலந்தூரில் அமைக்கப்பட்டுள்ள புதிய நீதிமன்றத்தால் இனி தாம்பரம் நீதிமன்றத்தை நாட வேண்டிய நிலை குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.