--- --:--:-- --

இன்று 27 ஆவது நாளை எட்டியுள்ள விவசாயிகளின் போராட்டம்..!

7

வேளாண் சட்டங்களை வாபஸ் பெறக் கோரி போராட்டம் நடத்தி வரும் விவசாய அமைப்புகள் தங்களின் அடுத்த கட்ட நகர்வு குறித்து இன்று ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

 

போராட்டம் இன்று 27 ஆவது நாளை எட்டியுள்ள நிலையில் சங்கிலித் தொடர் உண்ணாவிரதத்தை விவசாய அமைப்புகள் மேற்கொண்டுள்ளனர். மீண்டும் பேச்சுவார்த்தைக்கு வருமாறு மத்திய அரசு அழைப்பு விடுத்துள்ள நிலையில் அது குறித்து ஆலோசிக்கப்படும் என்று தெரிகிறது.

 

இதற்கிடையில் தங்கள் போராட்டத்திற்கு பீகார் உள்ளிட்ட பிற மாநில விவசாய அமைப்புகளின் ஆதரவை பெற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக பிராந்தி காரி சங்கம் தெரிவித்துள்ளது. புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக நாளை சட்டப்பேரவை சிறப்பு கூட்டத்தை கூட்டி தீர்மானம் ஏற்ற கேரள அரசு திட்டமிட்டுள்ளது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon