--- --:--:-- --

அடிப்படை வசதி செய்து தரக்கோரி இளையான்குடி சாலையில் இந்திராநகர் பொதுமக்கள் சாலை மறியல்

10

சிவகங்கை இந்திரா நகரில் அடிப்படை வசதி செய்து தராத நகராட்சியை கண்டித்து, சிவகங்கை – இளையான்குடி சாலையில் இந்திரா நகரை சேர்ந்த 50 கற்கும் மேற்ப்பட்டோர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

 

சிவகங்கை 27 ஆவது வார்டு இந்திராநகர் பகுதியில் தொடர்ச்சியாகப் பெய்துவரும் மழையின் காரணமாக மழைநீர் வெளியேற முடியாமல் தேங்கி நிற்கிறது‌. மழைநீர் முறையாக வெளியேறிச் செல்ல வடிகால் வசதி இல்லாததாலும், கழிவு நீர் செல்லும் கால்வாய் சேதமடைந்துள்ளதாலும் கழிவு நீரோடு மழை நீர் கலந்து குடியிருப்பு பகுதியில் தேங்கி, சுகாதார சீர்கேடு ஏற்படுத்தி நோய் உண்டாகும் நிலை ஏற்படுகிறது.

இதனால், இந்திரா நகரிலிருந்து மருத்துவமனைக்கு செல்லும் சாலை மற்றும் மாரியம்மன் கோவில் தெரு போன்ற பகுதிகளில் சாலைகள் முழுமையாக சேதமடைந்து அதிக அளவில் நீர் தேங்கி காணப்படுகிறது. மேலும் அடிப்படை வசதிகளான குப்பை தொட்டிகள், சின்டெக்ஸ் தண்ணீர் தொட்டிகள், சாலைகளை பழுது நீக்குதல், பேவர் பிளாக் சாலைகள் அமைத்தல் போன்ற அடிப்படை வசதிகளை அமைத்துதர வேண்டி கோரிக்கை விடுத்துள்ளனர்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon