--- --:--:-- --

தமிழக மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறு பிரதமருக்கு முதல்வர் எழுதியுள்ள கடிதம்..!

1

லங்கையில் சிறை பிடிக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்கள் 36 பேரை விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறு கோரி பிரதமர் நரேந்திர மோடிக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார்.

 

முதல்வர் எழுதியிருக்கும் கடிதத்தில் ராமநாதபுரம், தூத்துக்குடி மாவட்டங்களை சேர்ந்த 36 மீனவர்கள் ஐந்து விசைப் படகுகளில் மீன்பிடிக்க சென்ற போது கடந்த 14ஆம் தேதி இலங்கை கடற்படையினரால் சிறை பிடிக்கப்பட்டதாக குறிப்பிட்டுள்ளார்.

 

இந்த விவகாரத்தில் பிரதமர் நரேந்திர மோடி நேரடியாக தலையிட்டு மீனவர்களையும், விசைப் படகுகளையும் விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறு முதலமைச்சர் கேட்டுக்கொண்டுள்ளார்.

 

இதுகுறித்து வெளியுறவுத்துறை அமைச்சகம் மூலம் உடனடி நடவடிக்கை எடுக்குமாறு பிரதமரிடம் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கோரிக்கை விடுத்துள்ளார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon