--- --:--:-- --

அரியர் மாணவர்களுக்கு மீண்டும் தேர்வு அறிவிப்பு..!

1

சென்னை பல்கலைக்கழக அரியர் மாணவர்கள் கூடுதல் மதிப்பெண்களுக்கான தேர்வு எழுதலாம் என சென்னை பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. இறுதியாண்டு மாணவர்களைத் தவிர பிற மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி என அரசு அறிவித்திருந்தது.

 

ஆனால் அறிவியல் மாணவர்களுக்கு அது செல்லாது என பல்கலைக்கழக மானியக் குழு தெரிவித்தது. இது தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள நிலையில் மாணவர்கள் தங்களின் மதிப்பெண்களை அதிகரிக்கச் செய்யும் வகையில் தேர்வு நடத்தப் படுவதாக சென்னை பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

 

இதற்காக வரும் 21ஆம் தேதி முதல் தேர்வு நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்வு எழுத விரும்பும் மாணவர்களின் பட்டியலை அளிக்குமாறு உறுப்பு கல்லூரிகளுக்கு சென்னை பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon