--- --:--:-- --

கோவை : மாங்கரை காவல்துறை சோதனைச்சாவடியை பார்வையிட வந்த ” காட்டு யானை “.நாயை துரத்திய பரபரப்பு வீடியோ !!!

7.2

கோவை தடாகத்தை அடுத்த மாங்கரையில் உள்ள காவல்துறையினரின் சோதனைச் சாவடி அருகே இன்று அதிகாலை 4 மணியளவில் மிகப்பெரிய தந்தங்களுடன் கூடிய காட்டு யானை அங்கிருந்த நாய் குரைத்ததால் கோபமடைந்து நாயை விரட்டும் வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

 

கோவை ஆனைகட்டி மலைப் பகுதியில் ஏராளமான காட்டு யானைகள் உள்ளன. அவைகள் அவ்வப்போது ஆனைகட்டி மலையை ஒட்டியுள்ள மாங்கரை, தடாகம், வீரபாண்டி, பன்னிமடை உள்ளிட்ட கிராமங்களில் குடியிருப்பு பகுதிகள் மற்றும் விவசாய நிலங்களில் புகுந்து சேதங்களை ஏற்படுத்துவதோடு,மனித-உயிரின மோதல்களும் அவ்வப்போது நடைபெற்று வருகிறது.

 

இந்த நிலையில் அதிகாலை 4 மணியளவில் மாங்கரையில் உள்ள காவல்துறை சோதனைச்சாவடி அருகே ஆனைகட்டி செல்லும் சாலையில் மிகப்பெரிய தந்தங்களுடன் கூடிய ஒற்றை காட்டு யானை ஒன்று அசைந்தாடி வந்தது.சாலையில் வந்த காட்டு யானையை கண்டு அங்கிருந்த நாய் ஒன்று குரைத்தவாரே அருகில் சென்றது.நாய் குரைத்ததில் கோபமடைந்த காட்டு யானை திடீர் என அந்த நாயை துரத்திச் சென்றது.

 

இதனை அருகில் சென்று யானையைப் பார்த்துக்கொண்டிருந்த நபர் யானை நாயை துரத்தி வந்ததைப் பார்த்து பயந்து அங்கிருந்து தெறித்து ஓட்டம் பிடித்தார்.இந்த காட்சிகளை அங்கிருந்தவர்கள் செல்போனில் பதிவு செய்து அதனை சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளனர். அது தற்போது வேகமாக பகிரப்பட்டு வருகிறது.

 

மிகப்பெரிய தந்தங்களுடன் கூடிய ஒற்றை காட்டு யானை சர்வ சாதாரணமாக காவல் துறை சோதனைச்சாவடியை பார்வையிட அசைந்தாடி வந்த சம்பவம் கோவையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

மேலும்,வனப்பகுதியை ஒட்டியே காவல் துறை மற்றும் வனத்துறை சோதனைச்சாவடிகள் அருகருகே அமைந்துள்ளன.இரவுபகலாக இச்சோதனைச்சாவடிகளில் காவல் பணியில் எவ்வித பாதுகாப்பும் இல்லாமலும்,உயிருக்கு உத்தரவில்லாமலும் இரு துறையினரும் பயத்துடனேயே பணிபுரிந்து வருகின்றனர்.

 

குறைந்த பட்சமாக மின்வேலியாவது அமைத்து அவர்களை காக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon