எதிரிகளின் விமானங்களை தாக்கி அழிக்கக்கூடிய 10 ஆகாஷ் ஏவுகணைகள்..!
சீனாவுடன் லடாக் எல்லைப் பிரச்சினை நீடித்து வரும் நிலையில் எதிரிகளின் விமானங்களை தாக்கி அழிக்கக்கூடிய 10 ஆகாஷ் ஏவுகணைகளை செலுத்தி இந்திய விமானப்படை சோதனை செய்துள்ளது. ஆந்திராவில் சூரியலங்கா பகுதியில் நடைபெற்ற சோதனையில் ஏவுகணைகள் இலக்கை துல்லியமாக தாக்கி அழித்தனர் .
சீன விமானங்கள் இந்திய ஏவுகணைகள் அத்துமீறினால் பதிலடி கொடுக்க கிழக்கு லடாக் கட்டுப்பாட்டு பகுதியில் ஏற்கனவே தயாராக வைக்கப்பட்டுள்ளன.
ஆகாஷ் ஏவுகணையை மேலும் அதிக செங்குத்தான உயரத்தில் உள்ள இலக்கை தாக்கும் விதத்தில் டிஆர்டிஓ மேம்படுத்தி வருகிறது. வீரர்கள் தோளில் வைத்து ஏவக்கூடிய இக்லா ஏவுகணைகளும் சோதனை செய்யப்பட்டன.






