--- --:--:-- --

கோவையில் ரூ.1620 கோடி மதிப்பீட்டில் 10.10 கி.மீ நீளத்திற்கு உயர்மட்ட பாலம் அமைக்கும் பணிக்கான பூமி பூஜை.உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கலந்து கொண்டு பணிகளை துவக்கி வைத்தார் !!!

2.1

தென்னிந்தியாவின் மான்செஸ்டரான கோவையில் சிறு,குறு தொழில் நிறுவனங்கள்,கல்வி நிறுவனங்கள் அதிகளவில் உள்ளன.கோவையில் சமீபகாலமாக வாகனப்பெருக்கத்தின் காரணமாக கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு இதனை கருத்தில் கொண்டு கோவையில் உக்கடம்,காந்திபுரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உயர்மட்ட மேம்பாலங்கள் கட்டும் பணி துரிதமாக நடைபெற்று வருகிறது.

 

அதன் ஒருபகுதியாக கோவை அவினாசி சாலையில் உப்பிலிபாளையம் முதல் கோல்டுவின்ஸ் வரை 10.10 கி.மீ நீளத்திற்கு ரூ.1620 கோடி மதிப்பீட்டில் உயர்மட்ட பாலம் அமைக்கும் பணிக்கான பூமி பூஜை வ.உ.சி மைதானத்தில் இன்று நடைபெற்றது.உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கலந்து பூஜைகள் செய்து பணிகளை துவக்கி வைத்தார்.

 

இந்நிகழ்ச்சியில் துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன்,முன்னாள் அமைச்சர் செ.ம.வேலுச்சாமி,தாமோதரன்,முன்னாள் கயிறு வாரிய தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன்,மாநிலங்களவை உறுப்பினர் ஏ.கே.செல்வராஜ்,எம்.எல்.ஏ.க்கள் பி.ஆர்.ஜி.அருண்குமார், ஓ.கே.சின்னராஜ், வி.சி.ஆறுக்குட்டி, வி.பி.கந்தசாமி,கஸ்தூரி வாசு,எட்டிமடை சண்முகம்,அம்மன் அர்ஜூனன்,மாவட்ட ஆட்சியர் கு.ராசாமணி உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் உட்பட அரசு அதிகாரிகள்,அதிமுகவினர் பலர் கலந்து கொண்டனர்.

 

பின்னர் நடைபெற்ற விழாவில் பேசிய உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி ” கோவைக்கு ஒரு வரப்பிரசாதமாக,நீண்ட நாள் எதிர்பார்ப்பாக அவினாசி சாலை மேம்பாலம் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா,தமிழக முதல்வரும் அடிக்கல் நாட்டினார்கள்.தமிழக முதல்வர் நிதி ஒதுக்கி தந்தார்கள்.அம்மா இருக்கின்ற பொழுதெ 2016 சட்டமன்ற தேர்தலில் அறிக்கை தயாரிக்கும் குழுவில் இருந்தேன்.

அந்த அறிக்கையிலியே இந்த அவினாசி மேம்பாலம் கட்டும் திட்டம் இருந்தது எனவும்,விரிவான அறிக்கை பெறப்பட்டு விமான நிலையம் வரும் போதெல்லாம் இந்த பாலம் குறித்து பேசியதாகவும்,சென்னையை காட்டிலும் கோவையில் தான் பாலங்கள் அதிகம் எனவும்,அதிலும் தமிழகத்தில் இதுவரை 10 கிமீ அளவிற்கு பாலம் இல்லை.இந்த பாலப்பணிகளை துவக்கி வைப்பதில் பெருமகிழ்ச்சியடைவதாகவும் தெரிவித்தார்.

 

மேலும்,ஸ்டாலின் எழுதிக்கொடுப்பதை படிக்கிறார்.எந்த திட்டம் வந்தாலும் அதில் ஒரு குறை கண்டுபிடிக்கிறார்.தாங்கள் காலை 6 மணியில் இருந்து இரவு 1 மணி வரை உழைக்கிறோம்.திமுக எதுவுமே செய்யவில்லை.எல்லாமே ஏமாற்று வேலை.மக்களை ஏமாற்றுவதில் கைதேர்ந்தவர் ஸ்டாலின் எனவும் பேசினார்.

 

மேலும்,எதுவுமே செய்யமுடியாத வாக்குறுதியை கொடுப்பவர் ஸ்டாலின்.அவரை நினைத்தால் சிரிப்பு தான் வருகிறது. மத்தியிலும்,மாநிலத்திலும் ஆட்சியில் இருந்த போது செய்யாததை இப்பொழுது செய்வதாக கூறுகிறார் ஸ்டாலின்.செம்பரம்பாக்கம் ஏரிக்கு நேரில் சென்று மக்களை பயத்தில் இருந்து காப்பாற்றியவர் எடப்பாடி எனவும் தெரிவித்தார்.கோவை மாவட்டத்தில் பல்வேறு பாலங்கள் கட்டப்பட்டுள்ளதாகவும், சாலைகள் அனைத்தும் அகலப்படுத்தப்பட்டுள்ளதாகவும் பெருமிதம் தெரிவித்தார்.

 

மேலும்,ஸ்மார்ட் சிட்டி திட்டம்,5 கல்லூரிகள் கோவைக்கு கொடுத்தது,அரசு மருத்துவமனை ரூ.100 மேம்படுத்தப்பட்டது,ரூ.25 கோடியில் புற்றுநோய் சிகிச்சை கருவி வழங்கப்பட்டது உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்றுள்ளது. ஸ்டாலின் என்ன செய்தார் ?

 

மதுரைக்கு குடிநீர் பஞ்சம் ஏற்படாதவாறு முல்லைப்பெரியாரில் இருந்து தண்ணீர் கொண்டு வர திட்டம் விரைவில் தானும்,முதல்வரும் சென்று திட்டத்தை துவக்கி வைக்க உள்ளதாகவும் தெரிவித்தார்.

 

மத்திய அரசிடம் இருந்து 143 விருதுகளை பெற்றுள்ளோம்.பொய்யான வாக்குறுதிகளை சொல்லி கடந்த நாடாளுமன்றத்தேர்தலில் திமுக வாக்குகளை பெற்றது எனவும் குற்றஞ்சாட்டி பேசினார்.

 

மேலும்,3 ஆம் குடிநீர் திட்டம்,மேற்கு புறவழிச்சாலை உள்ளிட்ட மக்களுக்கு தேவையான திட்டங்களை கொடுத்தவர் எடப்பாடி பழனிச்சாமி எனவும் பெருமிதம் தெரிவித்தார்.இந்த வாய்ப்பினை வழங்கிய அம்மா அவர்களை இந்த உலகம் இருக்கும் வரை அவரது புகழ் இருக்கும் எனவும்,
மெட்ரோ ரயில் திட்ட ஆரம்ப கட்ட வேலைகள் நடந்து கொண்டுள்ளன.விரைவில் பணிகள் துவங்க உள்ளது.அவினாசி – அத்திக்கடவு திட்டத்தில் விடுபட்ட பகுதிகளும் சேர்க்கப்படும் எனவும் உறுதியளித்தார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon