நெல்லை மற்றும் தாமிரபரணி கரையோர மக்களுக்கு மாவட்ட நிர்வாகம் எச்சரிக்கை..!
நெல்லை தாமிரபரணி கரையோர மக்கள் பாதுகாப்பான இடத்திற்கு செல்லுமாறு ஒலிபெருக்கி மூலம் மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. நெல்லை மாவட்ட ஆட்சித்தலைவர் விஷ்ணு தலைமையில் நெல்லை சந்திப்பு, சிந்துபூந்துறை, கைலாசபுரம் உள்ளிட்ட தாமிரபரணி ஆற்றின் கரையோரப் பகுதிகளுக்கு நேரடியாக சென்று ஆய்வு நடத்தப்பட்டது.
ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்படக்கூடும் என்பதால் மக்கள் குளிக்க செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. மாஞ்சோலை உள்ளிட்ட மலைப் பகுதியில் ஒரு குழு கடற்கரையோர பகுதியில் ஒரு குழுவினர், நகர்ப்பகுதியில் ஒரு குழு என மொத்தம் மூன்று பிரிவாக பேரிடர் மீட்புக் குழுவினர் கண்காணித்து வருவதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
ஆந்திர மாநிலம் பிச்சாட்டூர் அணையில் இருந்து திறந்து விடப்பட்டிருக்கும் தண்ணீரால் ஆரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
பிச்சாட்டூர் அணை மற்றும் நந்தனம் காட்டுப்பகுதியில் இருந்து தமிழகத்திற்கு மொத்தம் 6 ஆயிரம் கனஅடி நீர் திறந்துவிடப்படுகிறது. இதனால் ஆரணி ஆற்றின் கரையோரங்களில் இருக்கும் மக்கள் பாதுகாப்பாக இருக்க மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளார்.






