--- --:--:-- --

சமஸ்கிருத செய்தி திணிப்பை உடனடியாக திரும்பப் பெற வேண்டும்..!

6

ன்முகத்தன்மை கொண்ட இந்தியாவின் ஒருமைப்பாட்டைப் பிளவுபடுத்தும் சமஸ்கிருத செய்தி திணிப்பை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என திமுக தலைவர் மு க ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

 

இது தொடர்பாக அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில் சமஸ்கிருத செய்தித் தொகுப்பை தமிழில் பொதிகை தொலைக்காட்சியிலும், பிற மாநில தொலைக்காட்சிகளில் ஒளிபரப்ப உத்தரவிட்டிருப்பது மொழி ஆதிக்கத்தின் ஒளி ஒலி வடிவம் என குறிப்பிட்டுள்ளார்.

 

பன்முகத்தன்மை கொண்ட இந்தியாவின் ஒருமைப்பாடு எனும் ஆலமரத்தை இந்தி மற்றும் சமஸ்கிருத மொழிகளில் திணிப்பு எனும் கோடாரி கொண்டு பிளக்கும் செயலை மத்திய அரசு நிறுத்த வேண்டும் என ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

 

பொதிகை உள்ளிட்ட மாநில தொலைக்காட்சியில் சமஸ்கிருத செய்தித் இணைப்பை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon