--- --:--:-- --

காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாளை புயலாக மாறும் என வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு..!!

4

தெற்கு வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுப்பெற்று நாளை காலை புயலாக மாறும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வங்கக் கடலில் கடந்த 23ஆம் தேதி உருவான புயல் புதுவை அருகே கரையை கடந்தது.

 

இதனால் ஏற்பட்ட சேதங்களே இன்னும் கணக்கிடப்படாத நிலையில் வங்கக்கடலில் தற்போது மேலும் ஒரு புயல் உருவாகியுள்ளது. தெற்கு அந்தமான் மற்றும் தென் கிழக்கு வங்க கடலில் கடந்த 28ஆம் தேதி உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி வலுப்பெற்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியுள்ளதால் மேலும் வலுப்பெற்று நாளை காலை புயலாக மாறும் என வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் தெரிவித்துள்ளார்.

 

டிசம்பர் 2, 3, 4 ஆகிய தேதிகளில் தென்தமிழகத்தின் அதீத கன மழை பெய்ய வாய்ப்பிருப்பதாகவும் வட தமிழக மாவட்டங்களில் கன மழையும் சில இடங்களில் மிதமான மழை வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon