--- --:--:-- --

புதுக்கோட்டையில் ரயில் பெட்டிகளாக மாறிய அரசு பள்ளி..!

5

புதுக்கோட்டை மாவட்டத்தில் கற்றலின் மீது மாணவர்களின் ஆர்வத்தை அதிகரிக்கும் முயற்சியாக அரசு பள்ளியின் வகுப்பறைகளில் ரயில் பெட்டிகளை போல ஓவியங்கள் தீட்டப்பட்டுள்ளன. கீரனூர் அருகே உள்ள கிராமத்தில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளியில் வராண்டாவில் நடந்து சென்றால் ரயில் நிலையத்தில் இருப்பது போன்ற உணர்வு தோன்றுகிறது.

 

ஒவ்வொரு வகுப்பறையின் சுவர், ஜன்னல்கள், ரயில்வே திரைகள் உள்ளிட்டவை தத்ரூபமாக வரையப்பட்டுள்ளன. வகுப்பறைகளின் வாயில்கள், ரயில் பெட்டியின் சுவர் அமைக்கப்பட்டுள்ளது.

 

தங்கள் பள்ளியில் பயிலும் மாணவர்களை ரயிலை நேரில் பார்த்திராத கிராமங்களை சேர்ந்தவர்கள் என்பதால் இந்த புதிய ஏற்பாடுகள் உற்சாகமூட்டும் என்று தலைமை ஆசிரியர்களும், ஆசிரியர்களும் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.

 

சூழல் புதிதாக இருப்பதால் கற்றலின் மீதான ஆர்வம் பல மடங்கு அதிகரிக்கும் என்றும் அவர்கள் கூறுகின்றனர். பள்ளிகள் மாணவர்களுக்கு இது இன்ப அதிர்ச்சியாக இருக்கும் என்கின்றனர் ஆசிரியர்கள்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon