--- --:--:-- --

நெல்லையில் இரு பிரிவினருக்கு இடையே மோதல்..!

10

நெல்லை கூடங்குளம் அருகே இரு பிரிவினருக்கு இடையே ஏற்பட்ட மோதலில் 7 வீடுகள், 10 இருசக்கர வாகனங்கள் சேதப்படுத்தப்பட்டுள்ளன. புதுமனையையை சேர்ந்த சிவராமன், சஞ்சய் ஆகியோர் செட்டிகுளம் இந்திராநகர் வழியே சென்றபோது அங்கிருந்தவர்களை சாதிப் பெயர் சொல்லி கிண்டல் செய்ததாக கூறப்படுகிறது.

 

இதனால் அந்த பகுதி மக்கள் சிவராமனை அடித்து காவல் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர். அங்கு சமாதானம் பேசி முடித்த நிலையில் புதுமனையை சேர்ந்தவர்கள் இந்திரா நகருக்குச் சென்று பத்திற்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்களை அடித்து நொறுக்கியது உடன் வீடுகளையும் அடித்து சேதப்படுத்தியதாக புகார் எழுந்துள்ளது.

 

இதையடுத்து சிவராமன் சஞ்சய் உள்ளிட்ட 4 பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon