--- --:--:-- --

அடுத்த 24 மணி நேரத்தில் புயல் உருவாகிறது..!

9

வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி தற்போது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. இதனுடைய அடுத்த நிலை புயல். இந்த புயல் அடுத்த 24 மணி நேரத்தில் வங்க கடலில் உருவாகும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

 

அந்த புயல் சென்னையிலிருந்து 740 கிலோ மீட்டர் தொலைவிலும், புதுச்சேரியில் இருந்து 700 கிலோ மீட்டர் தொலைவிலும் தற்போது காற்றழுத்த தாழ்வு மண்டலமானது நிலைகொண்டுள்ளது. கொஞ்சம் கொஞ்சமாக மேற்கு, வட மேற்கு திசையை நோக்கி நகர்ந்து வருகிறது.

 

மகாபலி புரத்திற்கும், காரைக்காலிற்க்கும் இடையே 25ஆம் தேதி பிற்பகல் கரையை கடக்கும் என்று ஒரு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அது கரையை கடக்கும் போது புயல் கரையை கடக்கும் அல்லது தீவிர புயலாக வலுப்பெற்று கரையை கடக்கும் என்பதற்கான தகவல் வெளிவரவில்லை.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon