--- --:--:-- --

சோனி பிராண்டை பயன்படுத்தி போலி டிவி விற்பனை..!

5

திருச்சியில் முன்னணி நிறுவனங்களின் பிராண்டை போலியாக பயன்படுத்தி எல்இடி டிவி விற்பனை செய்த கடை உரிமையாளர் உள்ளிட்ட மூன்று பேரை கைது செய்த போலீசார் 153 தொலைக்காட்சிப் பெட்டிகளை பறிமுதல் செய்தனர்.

 

பீமநகர் பகுதியில் சிட்டி பிளாசா வணிக வளாகத்தில் திருச்சி எலக்ட்ரானிக் ஷாப்பில் முன்னணி நிறுவனங்களின் டிவி, பிரிட்ஜ் உள்ளிட்டவை குறைந்த விலையில் விற்பனை செய்யப்படுவதாக தீபாவளி ஆஃபர் அறிவிக்கப்பட்டது.

 

32 இன்ச் எல்இடி சோனி டிவி வாங்கிய ஒருவர் அது இயங்காத நிலையில் சர்வீஸ் சென்டரில் பரிசோதித்ததில் போலி என்று தெரியவந்துள்ளது. புகாரின்பேரில் போலீசார் சோதனையிட்ட போது திருச்சியில் எலக்ட்ரானிக் ஷாப்பில் இருந்து அனைத்து எல்இடி டிவிக்களும் போலியானது என்று தெரியவந்துள்ளது.

 

கடையின் உரிமையாளர் நிஜாமுதீன் விற்பனையாளர்கள் ஆனா முகமது பைசல், சரவணன் ஆகியோர் மீது 8 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து போலீசார் கைது செய்தனர். கடையில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த சுமார் 25 லட்சம் ரூபாய் மதிப்பிலான 153 டிவிகளை பறிமுதல் செய்தனர்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon