--- --:--:-- --

மதுரையில் தலையை வெட்டி இளைஞர் படுகொலை..!

3

துரையில் பொதுமக்கள் நடமாட்டம் அதிகமுள்ள கீழ வெளி வீதி இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு இளைஞர்களை காரில் வந்த ஒரு கும்பல் ஓட ஓட விரட்டி அரிவாளால் வெட்டியதாக சொல்லப்படுகிறது.

 

இந்த சம்பவத்தில் அந்த நபரின் தலை துண்டிக்கப்பட்டு பதைபதைக்கும் காட்சிகள் காரிலிருந்து ஒருவரால் படம் பிடிக்கப்பட்ட நிலையில் வெளியாகியுள்ளது. அரிவாள் வெட்டு காயங்களுடன் மீட்கப்பட்ட கீழ் மதுரை முனுசாமி என்ற இளைஞர் மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

 

மதுரை சென்மேரீஸ் தேவாலய வாசலில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவியில் பதிவான காட்சியின் மூலம் கொலையாளிகளை போலீசார் தேடி வருகின்றனர். தலை துண்டித்து கொல்லப்பட்ட மதுரை ஒத்தக்கடை முருகானந்தத்தின் மீது பல்வேறு கொலை கொள்ளை வழக்குகள் உள்ளதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

இதனிடையே பயங்கர ஆயுதங்களுடன் பழங்காநத்தம் ஆர்‌டி‌ஓ அலுவலகத்தில் நிறுத்தப்பட்டிருந்த கார் ஒன்று பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon