--- --:--:-- --

பெற்றோர்கள் கண்முன்னே அலையில் இழுத்து செல்லப்பட்ட 5 பேர்..!

2

சென்னை காசிமேடு பகுதியில் கடலில் குளித்துக் கொண்டிருந்த 5 பேர் பெற்றோர்கள் கண்முன்னே அலையில் இழுத்து செல்லப்பட்டனர். ஒருவரின் சடலம் மீட்கப்பட்ட நிலையில் மேலும் 4 பேரை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

 

அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த அருள்ராஜ், துர்க்கா ஆகியோர் ராயபுரத்தில் உள்ள டீக்கடையில் பணியாற்றிவரும் தங்களது தந்தையை பார்க்க தாயுடன் சென்னை வந்தனர். திங்களன்று ஊருக்கு வந்த அவர்கள் பக்கத்தில் உள்ள வீடுகளை சேர்ந்த மூன்று குடும்பத்தினருடன் காசிமேடு கடற்கரைக்கு சென்று உள்ளனர்.

 

கடலில் குளித்துக் கொண்டிருந்த போது அருள்ராஜ், துர்கா இரட்டையர்களான மார்ட்டின் மார்கரெட் மற்றும் விஷ்ணு ஆகியோர் அலையில் சிக்கியுள்ளனர்.

 

பெற்றோர் கண்முன்னே கடலில் இழுத்துச் செல்லப்பட்ட அவர்களை அருள்ராஜ் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். மேலும் 4 பேரை தேடும் பணியில் தீயணைப்பு துறையினர் ஈடுபட்டு வருகின்றனர். இரவு நேரம் என்பதால் மீட்பு பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon