சாத்தான்குளம் சம்பவத்தின் விசாரணை டிசம்பர் 10ஆம் தேதிக்கு விசாரணை ஒத்திவைப்பு..!
சாத்தான்குளம் தந்தை – மகன் கொலை வழக்கு விசாரணையை டிசம்பர் 19ஆம் தேதிக்கு ஒத்திவைத்து மதுரை மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தை சேர்ந்த ஜெயராஜ், பென்னிக்ஸ் காவல்துறை விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்ட போது உயிரிழந்தனர்.
கடந்த ஜூன் 19ம் தேதி நடந்த இந்த சம்பவம் தொடர்பாக சாத்தான்குளம் காவல் ஆய்வாளர் உள்ளிட்ட 9 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். உயர் நீதிமன்ற மதுரை கிளையில் நடைபெற்று வரும் இந்த வழக்கின் விசாரணை மதுரை மாவட்ட நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது.
இதையடுத்து குற்றம் சாட்டப்பட்டவர்கள் விசாரணைக்காக நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டனர். அவர்களிடம் சிபிஐ தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையின் நகல் வழங்கப்பட்ட நிலையில் வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டது.






