--- --:--:-- --

திருமணத்திற்கு முன் போட்டோசூட்டின் போது இளம் ஜோடி ஆற்றில் மூழ்கி உயிரிழப்பு..!

11

கர்நாடகாவில் திருமணத்திற்கு முன்னதாக போட்டோசூட்டின் போது இளம் ஜோடி ஆற்றில் மூழ்கி உயிரிழந்தது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மைசூர் அருகே உள்ள கேப்மாரனா கள்ளியை சேர்ந்த 28 வயது சந்துரு, 20 வயது சசிகலாவுக்கு வரும் 22ம் தேதி திருமணம் நடைபெற இருந்தது.

 

இதையொட்டி போட்டோ ஷூட்காக சுற்றுலாத்தலமான தலக்காடு செல்ல முடிவு செய்து அந்த ஜோடி பரிசல் மூலம் காவிரி ஆற்றை கடக்க முடிவு செய்துள்ளனர். உறவினர்கள் மற்றொரு பரிசிலிலும் இவர்கள் ஒரு பரிசிலிலும் காவிரி ஆற்றை கடந்து உள்ளனர்.

 

ஆனால் கரையை எட்ட சுமார் 15 மீட்டர் தூரமே இருந்த போது இளம் ஜோடியின் கனவில் விதி விளையாடி விட்டது. அவர்கள் போட்டோஷூட்க்காக போஸ் கொடுத்தபோது பரிசல் திடீரென சாய்ந்து நீரில் கவிழ்ந்தது.

 

நீச்சல் தெரியாததால் இருவரும் சில வினாடிகள் தத்தளித்த நிலையில் நீரில் மூழ்கினர். இதனைக் கண்டு மற்றொரு பரிசலில் அவர்களை படம் பிடித்தவாறு சென்ற உறவினர்கள் பதறினாலும் காப்பாற்ற முடியவில்லை.

 

ஆனால் இந்த பரிசல் ஓட்டி நீந்தி கரைக்கு சென்று விட்டார். திருமணத்திற்கு இரண்டு வாரம் இருந்த நிலையில் போட்டோஷூட் காரணமாக இளம்ஜோடி உயிரை இழந்தது உறவினர்கள் மத்தியில் கடும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon