நாளைமுதல் 3 நாள்களுக்கு 24 மணி நேரமும் மாநகர பேருந்துகள் இயக்கம்..!
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சென்னையில் சிறப்பு பேருந்து நிலையங்களுக்கு செல்வதற்காக நாளை முதல் மூன்று நாட்களுக்கு 24 மணி நேரமும் மாநகர பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் இருந்து வெளியூர் செல்வதற்காக மாதவரம், தாம்பரம், பூவிருந்தவல்லி, கோயம்பேடு, கேகே நகர் உள்ளிட்ட 5 இடங்களில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்த 5 சிறப்பு பேருந்து நிலையங்களுக்கு செல்வதற்காக நாளை முதல் 13ம் தேதி வரை 310 மாநகர சிறப்பு பேருந்துகள் இயக்க உள்ளதாக மாநகர போக்குவரத்து கழகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.






