தென்னை மரத்தில் அசால்ட்டாக ஏறி இறங்கும் 7 வயது சிறுமி..!
7 வயது சிறுமி ஒருவர் சுமார் 28 அடி உயரம் கொண்ட தென்னை மரத்தில் சில வினாடிகளில் ஏறி இறங்கி அசத்துகிறார். பசுக்கடை விளையை சேர்ந்த ஹேனா என்ற அந்த சிறுமிக்கு ஒன்றரை வயது முதலில் தென்னை மரம் ஏறும் பயிற்சி அளித்து வந்ததாக அவரது பெற்றோர் கூறுகின்றனர்.
தற்போது ஐந்து நிமிடங்களில் 3 தென்னை மரங்களில் சிறுமி ஏறி இறங்குவதாக கூறும் அவரது பெற்றோர் கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பெற முயற்சித்து வருவதாக கூறுகின்றனர்.
அதேநேரம் 7 வயது சிறுமியை எவ்வித பாதுகாப்பு உபகரணங்களும் இன்றி பல அடி உயரம் உள்ள தென்னை மரங்களில் ஏற அனுமதிப்பது ஆபத்தானது என்று சமூக ஆர்வலர்கள் எச்சரிக்கின்றனர்.






