--- --:--:-- --

தமிழகத்தில் இன்று 2334 பேருக்கு கொரோனா…! உறுதி உயிரிழப்பு 20 ஆக குறைந்தது!!

9

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 2,334 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்ட நிலையில், இன்றைய உயிரிழப்பு 20 ஆக குறைந்துள்ளது. தமிழகத்தில் இன்றைய கொரோனா நிலவரம் தொடர்பாக சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: தமிழகத்தில் இன்று மேலும் 2,334 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

 

இதனால் தமிழகத்தில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 7 லட்சத்து 43 ஆயிரத்து 822 ஆக உயர்ந்துள்ளது. இன்று ஒரே நாளில் 2,386 பேர் கொரோனாவிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் இதுவரை 7,13,584 பேர் கொரோனாவிலிருந்து மீண்டுள்ளனர்.

 

இன்று கொரோனா பாதிப்பால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 20 ஆக குறைந்துள்ளது. இதனால் இதுவரை கொரோனாவால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 11 ஆயிரத்து 344 ஆக உயர்ந்துள்ளது. இன்று ஒரே நாளில் 75,384 பேரின் கொரோனா மாதிரிகள் சோதனை செய்யப்பட்டுள்ளன. இதனால் இதுவரை 1 கோடியே 5 லட்சத்து 61 ஆயிரத்து 722 மாதிரிகள் சோதிக்கப்பட்டுள்ளன என சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

 

தமிழகத்தில் கொரோனா தொற்று தொடர்ந்து குறைந்து வரும் நிலையில், கொரோனா வேகம் இன்னும் குறையவில்லை எனவும், அடுத்த 20 நாட்கள் சவாலானதாக இருக்கும் எனவும் தலைமைச் செயலாளர் சண்முகம் எச்சரிக்கை விடுப்பது போல் கூறியிருப்பதும் குறிப்பிடத்தக்கது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon