கஞ்சா விற்க முயன்ற உயர்நீதிமன்ற வழக்கறிஞர் போலீசாரால் கைது..!
சென்னை வியாசர்பாடியில் கஞ்சா விற்க முயன்றதாக உயர்நீதிமன்ற வழக்கறிஞர் ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர். எருக்கஞ்சேரி நெடுஞ்சாலையில் மாதவரம் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீசார் நேற்று மாலை கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது இரு இருசக்கர வாகனத்தில் வந்த பிடித்து விசாரித்ததில் ஒருவர் உயர் நீதிமன்ற வழக்கறிஞர் சரவணன் என்பதும், அவரிடம் இருந்து நூர் முகமது என்பவர் கஞ்சா வாங்க வந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து 2 பேரையும் கைது செய்த போலீசார் 2 கிலோ கஞ்சா மற்றும் இரு சக்கர வாகனங்களை பறிமுதல் செய்தனர்.






