வெகு விமர்சியையாக நடந்த முன்னாள் சட்டமன்ற உறுப்பினரின் மகள் திருமணம்..!
ஊரைக்கூட்டி வெகு விமரிசையாக திருமணம் செய்ய வேண்டும் என்று பெண்ணை பெற்ற அத்தனை அப்பாக்களுக்கும் ஆசையும் கனவும் இருக்கும். அதனை கண்குளிர காண்போர் வியக்கச் செய்து காட்டியுள்ளார் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஒருவர்.
மதுரை மாவட்டம் மேலூர் அருகே பதினெட்டாங்குடியை சேர்ந்த தமிழரசன் கடந்த முறை மதுரை கிழக்குத் தொகுதி எம்எல்ஏவாகவும், தற்போது மதுரை புறநகர் மாவட்ட அம்மா பேரவை செயலாளராகவும் மதுரை மாவட்ட ஆவின் நிர்வாக இயக்குனராகவும் உள்ளார்.
இவரது மகளான ஆர்த்தி என்பவர் மதுரை திருமங்கலத்தை சேர்ந்த வைத்தியநாதன் என்பவருடைய மகன் வெற்றிவேலுக்கும், மதுரை நாகமலை புதுக்கோட்டையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் கடந்த நான்காம் தேதி திருமணம் நடைபெற்றது.
திருமணத்திற்கு மணமக்கள் தரப்பில் டிராக்டர் விலை உயர்ந்த கார், இருசக்கர வாகனங்கள், குத்துவிளக்கு, டிவி, கட்டில், பீரோ, சீர்வரிசைபாத்திரங்கள், அரிசி மூட்டைகள் என பல கோடி ரூபாய் மதிப்பிலான பொருட்கள் சீர்வரிசையாக வழங்கப்பட்டது.
வெள்ளி பாத்திரங்கள் தொடங்கி வெண்கலப் பாத்திரங்கள் வரையிலும் அரிசி மூட்டைகள், ஆடுகள், மாடுகள் ஆகியவையும் 200 பவுன் தங்க நகைகளால் அலங்கரித்துள்ளார். திருமண விழாவில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் மகள் திருமணத்தின் சீர்வரிசைகளை கண்டவர்களும் கேட்டவர்களும் ஆச்சரியத்தில் வாயடைத்துப் போய் உள்ளனர்.






